Home வெளிநாட்டு உலகளவில் 17.63 கோடியை கடந்துள்ள கொரோனா தொற்றாளர்கள்..!

உலகளவில் 17.63 கோடியை கடந்துள்ள கொரோனா தொற்றாளர்கள்..!

93
0

கொரோனா வைரஸ் முழு உலக நாடுகளையும் உலுக்கி வரும் நிலையில்,  வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒராண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமையும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 17.63 கோடியைக் கடந்துள்ளதுடன், கொரோனா பாதிப்பிலிருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 38.10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவியவர்களில் 1.22 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதோடு,  85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here