Home வெளிநாட்டு பட்டு மற்றும் பாதை திட்டத்திற்கு போட்டியாக பைடன் முன்னெடுக்கும் ‘புளூ டொட் நெட்வேர்க்’

பட்டு மற்றும் பாதை திட்டத்திற்கு போட்டியாக பைடன் முன்னெடுக்கும் ‘புளூ டொட் நெட்வேர்க்’

75
0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுடன் இணைந்து, சீனாவின் பட்டிய மற்றும் பாதை முன்முயற்சிக்கு மாற்றாக வளர்ந்து வரும் சந்தைகளுக்கு வாய்ப்பினை வழங்குமொரு உள்கட்டமைப்பு முயற்சியை ஏற்படுத்தி வருகின்றது. 

நீண்ட கால செயலற்ற நிலையில் இருந்ததும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்பின் நிர்வாகத்தின் போது முதன்முதலாக  அறிவிக்கப்பட்டதுமான ‘புளூ டொட் நெட்வேர்க்கானது’ பாரிஸில் தனது பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை கடந்த திங்களன்று ஆரம்பித்திருந்தது. இந்த கூட்டத்தின்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக வொஷிங்டன் மற்றும் கான்பெர்ராவின் நிதி அளிப்பில் நிர்வாக ஆலோசனைக் குழுவை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைபேறான தன்மை போன்ற தரங்களை பூர்த்தி செய்யும் திட்டங்களுக்குச் சான்றளிக்கும் இந்த முயற்சிஇ வளர்ந்து வரும் சந்தைகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கு தனியார் துறையை ஊக்குவிப்பதாகவும் உள்ளது. இந்த அணுகுமுறைய பெய்ஜிங் மத்திய அரசாங்கத்திலிருந்து கடுமையான திட்டமிடல் மூலம் அமுலாகும் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்கு மாற்றானதாக பாராட்டப்பட்டது. 

‘புளூ டொட் நெட்வேர்க்கானது’ சந்தைக்கான உந்துதல், வெளிப்படையான மற்றும் நிலையான உட்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கான சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக இருக்கும் என்று ஆலோசனைக் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை வரவேற்று அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

‘புளூ டொட் நெட்வேர்கின்’ ஆரம்பக் கூட்டத்தில் சுமார் 12 ட்ரில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்டிருக்கும் 96 நாடுகளை உள்ளடக்கிய 150 இற்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர் என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்ந ஆரம்பக் கூட்டத்தின் அமர்வுகளில்  சிட்டி மற்றும் ஜே.பி மோர்கன் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும், பொதுதுறை அமைப்புக்களும், தாய்லாந்தின் அரச ஓய்வூதிய நிதியம் போன்றனவும் பங்கேற்றிருந்தமை முக்கியமானதாக உள்ளது.

ரண்ட் கூட்டுறவு நிறுவனத்தின் மூத்த பாதுகாப்பு ஆய்வாளர் டெரெக் கிராஸ்மேன், ‘அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் டொலர்களுக்கு சீனாவின் பட்டு மற்றும் பாதை முன்முயற்சி பொருந்தாது’ என்று கூறினார். இந்தக் கூற்றானது நேரடியான நிதியுதவிக்கு பதிலாக நற்சான்றிதழ் மற்றும் ஆலோசனையில் ‘புளூ டொட் நெட்வேர்க் ஏன் கவனம் செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இதனால், ‘புளூ டொட் நெட்வேர்க்’ சீனாவுக்கு எதிராக திறம்பட ‘போட்டியிடுவதற்கான’ வாய்ப்பு மிகக் குறைவு என்றும், வெளிப்படையாக பட்ட மற்றும் பாதை முன்முயற்சியினால் நன்மை பெறுநர்களின் பார்வையில் ‘புளூ டொட் நெட்வேர்க்’ மிகச்சிறியதாகவும் இல்லை என்றும் கருதப்படுவதாக  ஆனால்  பட்டி மற்றும் பாதை முன்முயற்சியுடன் ஒப்பிடப்படுகின்றது.

ஆனால் வொஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் தொடர்பான வல்லுநர்களான மத்தியூ குட்மேன், டானியல் ருண்டே மற்றும் ஜொனதன் ஹில்மேன் ஆகியோர் ‘உள்கட்டமைப்பு முதலீட்டின் நீண்ட கால வருவாயைத் தேடும் ட்ரில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதிக்க ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நிதிகள் உட்பட அமெரிக்காவிற்கு தனித்துவமான நிதிப் பலங்கள் உள்ளன’ என்று குறிப்பிடுகின்றனர்.

‘புளூ டொட் நெட்வேர்க்’ முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைத் தருவதற்கும், உள்கட்டமைப்பை சொத்து வகுப்பாக மாற்றுவதற்கு ஒரு படி மேலே செல்வதற்கும் உயர் தரமான சான்றிதழை வழங்கக்கூடும்’  என்றும் அவர்கள் வாதங்களை முன்வைக்கின்றார்கள்.

அமெரிக்கா ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளின் கூட்டிணைவு திட்டமான ‘புளூ டொட் நெட்வேர்க்’ முதன் முதலாக 2019 ஆம் ஆண்டு  பாங்கொங்கில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் வர்த்தக மாநாட்டில் அறிவிக்கப்படடது.

அக்காலத்தில் அமெரிக்க வர்த்தகச் செயலாளரான வில்பர் ரோஸ், ‘புளூ டொட் நெட்வேர்க்’ முன்முயற்சியை ‘உள்கட்டமைப்பு வளர்ச்சியில் சிறந்து விளங்குவதன் மூலமும், கொள்ளையடிக்கும் கடனுக்கான மாற்றுத்திட்டமாக கருதி ஆதரவளிப்பதன் மூலமும் நிலையான பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்கான பலதரப்பு அணுகுமுறையாக உள்ளது’ என்று கூறினார்.

ட்ரெம்பின் நிருவகாத்தில் இருந்த தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரும், சீனக் கொள்கையின் முக்கிய வரைஞருமான மத்தியூ பாட்டிங்கர், பூமியின் சின்னமாக இருக்கும் ‘புளூ டொடடைப்’ பெறுவது ‘உங்கள் உணவகத்திற்கு மிச்செலின்-நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுவது போலாகும்’ என்று வர்ணித்திருந்தார். 

அதேநேரம், ‘புளூ டொட் நெட்வேர்க்’ முன்முயற்சி தொடர்பில் படித்தபோது தனியார் துறையினர் அந்த திட்டங்களில் பங்கேற்பதற்கு விரும்புகிறார்கள். எனவே உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான ஊழல் அணுகுமுறைகளையும் கூட்டும் வகையில் இதன் வடிவம் காணப்படுகின்றது. இந்நிலைமையானது எங்களின் (அமெரிக்காவின்) செழிப்பை அனைவரும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு உதவும் என்றும் பாட்டிங்கர் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ‘ரைசினா’ உரையாடலின்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

‘புளூ டொட் நெட்வேர்க்’ முன்முயற்சியில் ‘நாற்கர பாதுகாப்பு’ (குவாட்) உரையாடலின் உறுப்பினராக இருக்கும் இந்தியாவையும் உள்ளீர்ப்பதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. எனினும் புதுடில்லி பட்டி மற்றும் பாதை முன்முயற்சி உட்கட்டமைப்பு அச்சுறுத்தலாக அமையும் என்பதாலேயே 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அதில் பங்கேற்பதற்கு மறுப்புக்களைத் தெரிவித்திருந்தது. 

இவ்வாறிருக்க, ‘புளூ டொட் நெட்வேர்க்கானது’ ஜி-7, ஜி-20 ஆகியன கொண்டிருக்கின்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கொள்கைகளை அதன் தரங்களுக்கான அடித்தளமாகப் பயன்படுத்தும், அதேநேரத்தில் பொருளாதார  ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு உலகளாவிய சான்றிதழ் செயல்முறை மற்றும் மீளாய்வுக் கட்டமைப்பிற்காக தொழில்நுட்ப செயற்பாட்டு உள்ளீட்டை வழங்கவுள்ளது.

சர்வதேச கற்கைகள் மற்றும் மூலோபாயங்களுக்கான நிலையம் சான்றிதழ் செயல்முறை விலை உயர்ந்ததாக இருக்கும்  என்று எதிர்வு கூறுகின்றது. ஏனெனில் ‘தனியார் துறை முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடுவதை வலியுறுத்துவதற்காக சான்றிதழ் செயலமுறை கடுமையாக இருக்க வேண்டும் என்று கருதுவதாக அந்நிலையம் காரணம் கூறுகின்றது.

எனவே அத்தகைய தரநிலைகளை உருவாக்கும்போது கட்டடம் கட்டுபவர்கள் முதல் நிதியாளர்கள் வரை பங்குதாரர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆகவே தரநிலைகளை உருவாக்குவது தொடர்பில் மேலும் தீவிரமான கலந்துரையாடல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் அவசியமாகின்றன. அதேநேரம், கடந்த ஆண்டு ‘புளூ டொட் நெட்வேர்க்’ முயற்சி குறித்த விளக்கவுரையில் தரநிலைகள் தொடர்பான செயல்முறையை அமுலாக்குவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here