Home வெளிநாட்டு இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் இரு பாலஸ்தீனிய அதிகாரிகள் பலி

இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் இரு பாலஸ்தீனிய அதிகாரிகள் பலி

98
0

மேற்குக் கரை நகரமான ஜெனினில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட மோதல்களில் இஸ்ரேலிய படையினர் இரு பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்றாவது பாலஸ்தீனியர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து உடனடியாக பதில் எதுவும் வரவில்லை.

அந் நாட்டு ஊடகங்களில் பரப்பப்பட்ட ஒரு சுவரொட்டி இறந்த இருவரையும் பாலஸ்தீனிய ஆணையத்தின் இராணுவ புலனாய்வுப் படையின் உறுப்பினர்கள் என அடையாளம் கண்டுள்ளது.

பாலஸ்தீனிய அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையோரப் பகுதிகளில் இஸ்ரேலிய சோதனைகள் பொதுவான சம்பவம் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here