Home வெளிநாட்டு வெளியேற்றல் பணிகளுக்காக ஆப்கானிஸ்தான் சென்ற உக்ரேன் விமானம் கடத்தல்

வெளியேற்றல் பணிகளுக்காக ஆப்கானிஸ்தான் சென்ற உக்ரேன் விமானம் கடத்தல்

35
0

தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் வெளியேற்றும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரேனியர்களை வெளியேற்ற காபூலுக்கு சொன்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனம் TASS தெரிவித்தது.

அடையாளம் தெரியாத நபர்களால் விமானம் கடத்தப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானுக்கு பறந்து சென்றதாக உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் எவ்ஜெனி யெனின் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here