Home வெளிநாட்டு இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்

47
0

இந்தோனேஷியாவின் பப்புவாவின் தெற்கு கடற்கரை அருகே திங்கள்கிழமை 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் நபிரே நகரிலிருந்து 203 கிலோ மீட்டர் தென்மேற்கில் 12.87 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

இதனால் உண்டான உயிர் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்தோனேசியா ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் நில அதிர்வு செயலில் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது. அதனால் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டில் சுமத்ராவின் அசே பகுதியில் 9.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்தியப் பெருங்கடலை அண்மித்துள்ள பல நாடுகளில் சுனாமி ஏற்பட்டது.

இதனால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here