Home வெளிநாட்டு ஸ்வீடனில் சிறிய ரக விமானம் விபத்து ; 9 பேர் பலி

ஸ்வீடனில் சிறிய ரக விமானம் விபத்து ; 9 பேர் பலி

54
0

ஸ்வீடன் நாட்டில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானி உள்பட 9 பேருடன் விமானம் ஸ்வீடன் நாட்டின் ஒரோப்ரோ விமான நிலையம் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் தரையில் விழுந்த சில வினாடிகளில் தீப்பற்றி எரிந்தது. 

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 ஸ்கைடைவிங் வீரர்கள் மற்றும் விமானி என 9 பேரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களில் உடல்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here