Home வெளிநாட்டு எத்தியோப்பியாவில் 4 இலட்சம் பேர் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

எத்தியோப்பியாவில் 4 இலட்சம் பேர் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

81
0

எத்தியோப்பியாவில் சுமார் 4 இலட்சம் பேர் வரையில் பஞ்சத்தில் சிக்குண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

அந்த நாட்டின் டிக்ரேய் பிராந்தியத்தில் கிளர்ச்சிப் படையினருக்கும் அரச படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் 4 இலட்சம் பேர் பட்டினியால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நெருக்கடி நிலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது எத்தியோப்பியாவில் 33 ஆயிரம் சிறார்கள் மந்தபோசனைக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் அங்குப் பஞ்சத்தினால் சுமார் 1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here