Home வெளிநாட்டு எப்.ஏ.ரி.எப் இன் ‘அதிகரித்த காண்காணிப்பு பட்டியலில்’ பாகிஸ்தான்

எப்.ஏ.ரி.எப் இன் ‘அதிகரித்த காண்காணிப்பு பட்டியலில்’ பாகிஸ்தான்

63
0

‘பயங்கரவாத குழுக்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட மூத்த தலைவர்களை விசாரணை செய்வதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் இடமளிப்பதற்கு தவறியதால் பாகிஸ்தான், எப்.ஏ.ரி.எப் எனப்படும் நிதிச்செயற்பாட்டு விசேட செயலணியின் சாம்பல் நிற பட்டியலில் அதாவது ‘அதிகரித்த கண்காணிப்பு பட்டியலில்’ இணைக்கப்பட்டுள்ளது’

சர்வதேச நிதிச் செயற்பாட்டுச் விசேட செயலணியின் (எப்.ஏ.ரி.எப்) ‘அதிகரித்த கண்காணிப்பு பட்டியலில்’ பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும் என்று அச்செயலணி கடந்த வாரம் அறிவித்துள்ளது. இந்த முடிவை எப்.ஏ.ரி.எப் இன் தலைவர் டாக்டர் மார்கஸ் பிளேயர் அறிவித்துள்ளார்.  

அவர் ‘பாகிஸ்தான் பயங்கரவாத விவகாரத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் 27இல் 26 ஐ பெரும்பாலும் கவனித்துள்ளது.  எவ்வாறாயினும், ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட பயங்கரவாத குழுக்களின் மூத்த தலைவர்களின் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கும்  உருப்படியான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், ‘2019 ஆம் ஆண்டில், எப்.ஏ.ரி.எப் இன் ஆசிய பசிபிக் பிரிவினுடைய பிராந்திய பங்குதாரர்கள், பாகிஸ்தானின் பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதி ஆகிய விடயப்பரப்புக்களில் பல கடுமையான சிக்கல்களை அடையாளம் கண்டனர். அதனடிப்படையில் பாகிஸ்தானில் பணமோடி அபாயம் உள்ளதை எப்.ஏ.ரி.எப் இன் அடையாளம் கண்டது. அதுபற்றி பாகிஸ்தானுடன் கலந்துரையாடியது’ என்றும் அவர் கூறினார்.

‘பாகிஸ்தான் பண மோசடி விசாரணைகள் மற்றும் வழக்குகள் பற்றிய விசாரணைகள் அதிகரிப்படுவது நிரூபிக்கப்பட வேண்டும். நாட்டின் நிதிமோசடி  தொடர்பான விபரங்களுக்கு ஏற்றவாறு நிதி மோடிக் குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், குற்றங்களுடன் தொடர்புடைய சொத்துக்களை கண்டுபிடித்தல், முடக்குதல் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் வெளிநாட்டு சகாக்களுடன் இணைந்து பணியாற்றுமாறு எப்.ஏ.ரி.எப் இன் அறிக்கையொன்று கூறியுள்ளது.

இவ்வாறிருக்க, எப்.ஏ.ரி.எப் இன் மெய்நிகர் கூட்டம் டாக்டர் மார்கஸ் பிளேயரின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது, உலகளாவிய ரீதியில் இந்த வலையமைப்பின் 205 பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் எக்மன்ட் குழு, நிதி நுண்ணறிவு அலகுகள் உள்ளிட்ட பார்வையாளர் அமைப்புகள் உள்ளிட்ட தரப்பினர் இதில் கலந்து கொண்டனர். 

அக்கூட்டத்தில், கேள்விக்கு பதிலளித்த எப்.ஏ.ரி.எப் இன் கண்காணிப்புக் குழுவின் தலைவர், ‘அனைத்து செயற்றிட்ட படிமுறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் அதிகரித்த காண்காணிப்பு பட்டியலில் இருந்து வெளியேறுவதற்காக பட்டியலில் உள்ள  நாடுகள் அவற்றுக்கான இலக்குகளை  பூர்த்தி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டதோடு,  இந்த நிபந்தனையானது அனைத்து நாடுகளும் சமனாக இருப்பதோடு பாகிஸ்தான் அரசாங்கமும் எங்களது நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதே எதிர்பார்ப்பாகவுள்ளது என்றும் அவர் கூறினார்.  

பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் தனது பயங்கரவாத எதிர்ப்பு, நிதிக் கையாளுகை, பணமோசடி எதிர்ப்பு தொடர்பில் ஆட்சியில் உள்ள குறைபாடுகள் போன்ற காரணங்களால் 2018 ஜூன் மாதம் முதல் ‘அதிகரித்த காண்காணிப்பு பட்டியலில்’ உள்ளது. பாக்கிஸ்தான் அதிகரித்த கண்காணிப்பு பட்டியலில் தொடர்வதென்பது,  சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் முதலீடுகள் மற்றும் உதவிகளை அணுவதற்கு வாய்ப்புக்களை வழங்காது. 

ஆகவே நிதி நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக பாக்கிஸ்தான் தனது பெயரை அதிகரித்த கண்காணிப்பு பட்டியலில் இருந்து விலக்கும் கடினமான பணியை முன்னெடுக்க வேண்டியதாகவுள்ளது. அதேநேரம், பயங்கரவாத அமைப்புக்களை காப்பாற்றும் அதேநேரம், இவ்விதமான நிதி உதவிகளையும் பெற்றுக்கொள்வதென்பது மிகவும் கடினமான பணியாகவே இருக்கப்போகின்றது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான ‘தபட்லாப்’, 2008 முதல் மூன்று முறை அதிகரித்த காண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளால் 38 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பொருளாதார இழப்பைச் பாகிஸ்தான்  சந்தித்துள்ளது என்று வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, ‘உலகளாவிய அரசியலின் விலைளைத் தாங்குதல் – பாக்கிஸ்தானின் பொருளாதாரத்தில் அதிகரித்த கண்காணிப்பு பட்டியலின் தாக்கம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையிலும் மேற்படி பொருளாதார இழப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here