Home வெளிநாட்டு சமாதானத்தை விரும்பும் பாக்.செயற்பாட்டாளர் கொலை..!

சமாதானத்தை விரும்பும் பாக்.செயற்பாட்டாளர் கொலை..!

77
0

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ஜம்மு-காஷ்மீருடன் ஒன்றிணைக்க விரும்பிய முக்கிய தேசியவாத அரசியல் ஆர்வலரும், மத நம்பிக்கையளருமான வைத்தியர் குலாம் அப்பாஸ் கொல்லப்பட்டார். அவர் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி (யு.கே.பி.என்.பி) பாகிஸ்தான் அரசு மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், “நீண்ட காலமாக அமைதியாக போராடி வரும் அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒற்றுமையை மீட்டெடுப்பதற்காக அமைதியாக போராடுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும் எங்கள் கட்சி நம்புகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

“உலகெங்கிலும், அமைதியை நேசிக்கும் ஆர்வலர்கள் அரசியல் சகோதரத்துவ மற்றும் மனித உரிமை அமைப்புகளால் பாராட்டப்படுகிறார்கள், ஆனால் பாகிஸ்தானின் உயரடுக்கு தரப்பினர் மூலோபாய வடிவமைப்புகளைப் பின்பற்றுவதற்காக வெளிநாட்டு முகவர்களாக அவர்களைச் சித்தரித்து மௌனிப்பதற்கே முனைகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அந்த அடிப்படையில், குலாம் அப்பாஸின் கொலையாளிகளை உடனடியாக கைது செய்து நீதிக்கு கொண்டு வருமாறு கட்சி உள்ளூர் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த துயரமான சூழலைக் கவனத்தில் கொள்ளுமாறு சர்தார் ஷ ரமஹத் அலி காஷ்மீரி- பாகிஸ்தான், மனிதாபிமான மற்றும் முற்போக்கான தரப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிராந்திய தேசியவாத அரசியல் கட்சிகளின் அனைத்து தலைவர்களும் பொதுவானதொரு மூலோபாயத்தை பின்பற்றவும், இதுபோன்ற கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இல்லையெனில், ஒவ்வொரு செயற்பாட்டாளர்களாக அறியப்படாத குண்டர்களால் கொலை செய்யப்படும் நிலைமை ஏற்படும் ஆபத்துள்ளது என்றும் அவர் கூறினார். 

பாக்கிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்திய ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி, இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு உண்மை கண்டறியும் குழுவை அனுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு தனியாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47ஆவது அமர்வுக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கவலைகள் வெளியிடப்பட்டு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சியானது மதத்தை ஆயுதமாகவும் பயங்கரவாதமாகவும் வெளியுறவுக் கொள்கைக் கருவியாகப் பயன்படுத்துவதற்கான பாகிஸ்தான் கொள்கையை எதிர்க்கிறது.

எங்கள் பிராந்தியம் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கான குரல்களை அழுத்துவதற்கான ஆரம்ப பயிற்சி முகாமாக உள்ளது” என்று ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஆசார் காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தான் என்று அழைக்கப்படுபவை 1947 முதல் பாகிஸ்தான் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகும். 

கடந்த 73 ஆண்டுகளாக, இந்த பகுதியின் வளர்ச்சியை அரசாங்கம் புறக்கணித்தது மட்டுமல்லாமல், மக்களை அரசியல் ரீதியாக அடக்குவதிலும் ஈடுபட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here