Home விளையாட்டு இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் நான்காம் நாள் ஆட்டம் இன்று!

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் நான்காம் நாள் ஆட்டம் இன்று!

79
0

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அந்த அணியின் கேன் வில்லியம்சன் 12 ஓட்டங்களுடனும், ரோஸ் டெய்லர் எந்தவித ஓட்டங்கள் இன்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here