Home விளையாட்டு கிரிக்கெட்டில் களமிறங்குகிறார் அர்ஜுன ரணதுங்கவின் மகன்

கிரிக்கெட்டில் களமிறங்குகிறார் அர்ஜுன ரணதுங்கவின் மகன்

73
0

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்‍தை வென்றுகொடுத்த இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் புதல்வரான தயான் ரணதுங்க அமெரிக்காவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்கு  தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபையால் நடத்தப்படவுள்ள MINOR CRICKET LEAGUE ( மைனர் கிரிக்கெட் லீக்) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து விலகிய கிரிக்கெட் வீரரான அமில அபோன்ஸோ  கடந்த 14 ஆம் திகதியன்று அமெரிக்காவுக்கு சென்றார். 

மற்றொரு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷெஹான் ஜயசூரிய, அமில அபோன்ஸோவுக்கு முன்னதாக இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இப்போட்டித் தொடருக்கு, ஷெஹான் ஜயசூரிய, அமில அபோன்ஸோ, தயான் ரணதுங்க ஆகிய மூவரைத் தவிரவும் இலங்கையைச் சேர்ந்த மேலும் ஏழு பேர் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here