Home விளையாட்டு எஸ்.எல்.சி.யின் டயலொக் டி-20 ; இன்றைய போட்டி நாளைய தினத்துக்கு மாற்றம்

எஸ்.எல்.சி.யின் டயலொக் டி-20 ; இன்றைய போட்டி நாளைய தினத்துக்கு மாற்றம்

38
0

இலங்கை கிரிக்கெட் நடத்தும் டயலொக் டி-20 தொடரில் இன்று இடம்பெறவிருந்த இரு போட்டிகள் நாளைய தினத்துக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்குகொள்ளும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்குமிடம் வழங்கிய ஹோட்டல் ஊழியர்கள் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எழுமாறான  பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா தொற்றுக்குள்ளான ஹோட்டல் ஊழியர்களில் எவரும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை என்றும் இலங்கை கிரிக்கெட் கூறியுள்ளது.

இந் நிலையில் அணியின் வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக வேறு இரண்டு ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here