Home விளையாட்டு பெடரர், நடால், ஜோகோவிக் வெற்றி: இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்..!

பெடரர், நடால், ஜோகோவிக் வெற்றி: இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்..!

83
0

பிரான்ஸில் நடைபெற்றுவரும் 125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க போட்டியின் முதல் சுற்றில் முன்னனி டென்னிஸ் நட்சத்திரங்களான ரொஜர் பெடரர், ரபாயல் நடால், நொவாக் ஜோகோவிக் ஆகியோர் வெற்றியீட்டி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தனது முதற் சுற்றுப் போட்டியில்  உஸ்பெக்கிஸ்தானின் டெனிஸ் இஸ்தோன்மின்னை 6க்கு2 , 6க்கு 4 , 6க்கு 3 என நேர் செட்களில் இலகுவாக வெற்றியீட்டி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்

அவுஸ்திரேலியாவின் அலெக்ஸி பொப்ரியனை எதிர்கொண்ட நடப்புச் சம்பியான ஸ்பெய்னின் ரபாயல் நடால் 6க்கு3 ,  6க்கு2, 7க்கு6 (7/3) என்ற செட் கணக்கில் வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இதேவேளை, சர்வதேச தரவரிசையில் முதலிடத்திலுள்ள சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் அமெரிக்காவின் டென்னிய்ஸ் சான்ட்கிரானை 6க்கு 2 , 6க்கு4, 6க்கு 2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 

முதல் சுற்றப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த சுற்றான இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here