Home விளையாட்டு மேற்கிந்தியத் தீவுகள் குழாத்தில் மீண்டும் செமார், ப்றூக்ஸ்

மேற்கிந்தியத் தீவுகள் குழாத்தில் மீண்டும் செமார், ப்றூக்ஸ்

57
0

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர் செமார் ஹோல்டர் மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ஷமாஹ் ப்றூக்ஸ் ஆகியோர் குழாத்துக்கு மீளழைக்கப்பட்டுள்ளனர்.

உபாதையிலிருந்து பூரண குணமடையாததன் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஷெனன் கேப்றியல் குழாத்தில் பெயரிடப்படவில்லை.

இதேவேளை, கொவிட் உயிரியல் குமிழிக்குள் மிக நீண்ட காலம் இருக்க நேரிட்ட டெரன் ப்ராவோவுக்கு விடுகை வழங்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஹோல்டர் அதன் பின்னர் அணியில் இடம்பெறவில்லை.

அதே போட்டியில் கடைசியாக விளையாடியிருந்த ப்றூக்ஸ், அண்மையில் நடைபெற்ற உள்ளக சிறப்பு கிரிக்கெட் போட்டி (இன்ட்ரா பெஸ்ட் எதிர் பெஸ்ட்) ஒன்றில் சதம் குவித்ததன் பலனாக அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் புதன்கிழமை 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, 2023க்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் அமைகின்றது.

இரண்டு டெஸ்ட் போட்டிளும் சபினா பார்க் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதுடன் 2ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் குழாம்: க்ரெய்க் ப்ரத்வெய்ட் (தலைவர்), ஜேர்மெய்ன் ப்ளக்வூட், நிக்ருமா பொனர், ஷமாஹ் ப்றூக்ஸ், ரக்கீம் கோர்ன்வோல், ரொஸ்டன் சேஸ், ஜொஷுவா டா சில்வா, ஜஹ்மார் ஹெமில்டன், செமார் ஹோல்டர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோசப், கய்ல் மேயர்ஸ், கீரன் பவல், கெமர் ரோச், ஜேடன் சீல்ஸ், ஜோமெல் வொரிக்கன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here