Home விளையாட்டு ஒலிம்பிக் குதி‍ரை‍யேற்றத்தில் இன்று களம் காணும் இலங்‍கை..!

ஒலிம்பிக் குதி‍ரை‍யேற்றத்தில் இன்று களம் காணும் இலங்‍கை..!

49
0

டோக்­கியோ ஒலிம்பிக் அரங்கில் இலங்கை பங்­கேற்கும் இறுதிப் போட்­டி­யான குதி­ரை­யேற்ற போட்டி நிகழ்வு இன்று நடை­பெ­ற­வுள்­ளது. ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்கு நேர­டி­யாக தகு­தி­பெற்ற முதல் இலங்கை வீராங்­க­னை­யான மடில்டா கார்ல்சன் இன்று இலங்கை கொடி­யுடன் குதி­ரைமேல் அமர்ந்து களம் காண­வுள்ளார்.

இலங்கை பெற்­றோ­ருக்குப் பிறந்து, பின்னர் சுவீடன் நாட்­ட­வர்­க­ளுக்கு தத்துக் கொடுக்­கப்­பட்ட மடில்டா கார்ல்சன்,  தற்­போது ஜேர்­மனில் வசித்து வரு­கின்றார். ஒலிம்பிக் வர­லாற்றில் இலங்கை முதன் முறை­யாக குதி­ரை­யேற்றப் போட்­டியில் பங்­கேற்­கின்­றது. அதுவும் நேரடி தகு­தி­பெற்று போட்­டியில் கலந்­து­கொள்­கின்­றது.

டோக்­கியோ ஈக்­வெஸ்ட்­ரியன் மைதா­னத்தில்  இலங்கை நேரப்­படி இன்று பிற்­பகல் 3.30 மணிக்கு ஆரம்ப சுற்றுப் போட்­டிகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இதில் 13ஆவது வீராங்­க­னை­யாக  தனது குதி­ரை­யுடன் கள­மி­றங்­கு­கின்றார் மடில்டா கார்ல்ஸன். இந்தச் சுற்றில் 75 வீரர்கள் பங்­கேற்­கின்­றனர். அதில் 30 பேர் தேர்வு செய்­யப்­பட்டு முதல் மூன்று மதிப்­பெண்­களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்­கலப் பதக்­கங்கள் வழங்­கப்­படும்.

மடில்டா கார்லன் 1984ஆம் ஆண்டு செப்­டெம்பர் 27 ஆம் திகதி கண்­டியில் பிறந்தார். அவ­ருக்கு மூன்று மாத வய­தாக இருந்­த­போது, அவ­ளது இலங்கை பெற்­றோர்கள் சுவீடன் தம்­ப­தி­யி­ன­ருக்கு மடில்­டாவை தத்­துக்­கொ­டுத்­துள்­ளனர்.

மடில்­டா­வுடன் போட்டியிடும் குதிரையின் பெயர் சோபின். இது 12 வயதாகும் ஆண் குதிரையென்பதும் குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here