Home விளையாட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யாஷ்பல் ஷர்மா காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யாஷ்பல் ஷர்மா காலமானார்

24
0

1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்த யாஷ்பல் ஷர்மா (66), மாரடைப்பு காரணம் டெல்லியில் இன்று(13) காலமானார்.

இதனை அவரது உறவினர்கள் இந்திய ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

யாஷ்பல் ஷர்மா 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1,606 ஓட்டங்களை பெற்றுள்ள அதேவேளை, 42 ஒருநாள் போட்டிகளில் 883 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து, ஓல்ட் ட்ராஃபோர்டில் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் அவரது துணிச்சலான அணுகுமுறை மற்றும் அசத்தலான அரைச்சதம் என்பன கிரிக்கெட் ரசிகள் மத்தியில் இன்றும் நினைவுக்கூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here