Home விளையாட்டு டேனியல் விக்டோரிக்கு பதிலாக பங்களாதேஷின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக ஹெரத் ?

டேனியல் விக்டோரிக்கு பதிலாக பங்களாதேஷின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக ஹெரத் ?

103
0

இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத் நியூஸிலாந்தின் டேனியல் விக்டோரிக்கு பதிலாக பங்களாதேஷின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இந்த அறிவிப்பினை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டுத் தலைவரான அக்ரம் கான் உறுதபடுத்தியுள்ளார்.

குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ள வேட்பாளர்களில் ஒருவர் ஹெரத் ஆவார். அவர் தற்சமயம் இந்த பதவிக்கான முன்னணியில் உள்ளதாக அக்ரம் கான் கிரிக்பஸிடம் கூறியுள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோயால் டேனியல் விக்டோரிக்கு தொடர்ந்தும் பங்களாதேஷ் அணியில் இணைய முடியாத காரணத்தினால், சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவி தற்சமயம் காலியாகிவிட்டது.

பாகிஸ்தான் சயீத் அஜ்மல் மற்றும் இந்தியாவின் சைராஜ் பஹாதுலே ஆகியோர் பங்களாதேஷ் அணிக்கான சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள ஏனைய இருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதாக ரங்கனா ஹெரத் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் உள்ளூர் சுழல் பயிற்சியாளர் சோஹல் இஸ்லாமை அணிக்கான தற்காலிக சுழற்பந்து வீச்சாளராக பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here