Home விளையாட்டு யூரோ கிண்ண காலிறுதி : ஸ்பெய்ன் – சுவிற்ஸர்லாந்து மோதல்

யூரோ கிண்ண காலிறுதி : ஸ்பெய்ன் – சுவிற்ஸர்லாந்து மோதல்

62
0

யூரோ கிண்ண கால்பந்தாட்டம் 2020 தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காலிறுதிச் சுற்று இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் போட்டியில் சுவிட்ஸர்லாந்து மற்றும் ஸ்பெய்ன் அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன.

ரஷ்யாவின் சென்.பீற்றர்ஸ் பேர்க்கில் நடைபெறும் இப்போட்டி இன்று இலங்கை நேரப்படி 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் யூரோ கால்பந்தாட்ட வரலாற்றில் இந்த இரண்டு அணிகளின் தரவுகள் குறித்து சற்று பார்ப்போம். 

சுவிட்ஸர்லாந்து பார்க்கிலும், ஸ்பெய்ன் அணி யூரோ கால்பந்தாட்ட வரலாற்றில் சிறப்பாக வரலாற்றைக் கொண்டுள்ளது. 

யூரோ கிண்ண  கால்பந்தாட்ட வரலாற்றில் ஸ்பெய்ன் அணி 11 ஆவது தடவையாக பங்கேற்பதுடன், 6 ஆவது தடவையாக நொக் அவுட் சுற்றில் விளையாடுகிறது. 

ஸ்பெய்ன் அணி 1964, 2008 மற்றும் 2012 என மூன்று தடவைகள் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. 2016 இல் நடப்புச் சம்பியனாக களமிறங்கிய ஸ்பெய்ன் அணி 16 அணிகள் கொண்ட சுற்றின்போது இத்தாலிய அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தது. 

சுவிட்ஸர்லாந்தைப் பொருத்தவரையில், யூரோ கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் 5 ஆவது தடவையாக பங்கேற்கிறது.  தற்போது காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளமையே சுவிட்ஸர்லாந்தின் சிறந்த பெறுபேறாகும். 

யூரோ கிண்ண கால்பந்தாட்டத்தில் சுவிஸ் அணி பங்கேற்ற முதல் மூன்று தடவைகளிலுமே  முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளதுடன், கடந்த முறை நடைபெற்ற தொடரில் 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியதுடன், தற்போது முதல் முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் ஒன்றையொன்று 22 தடவைகள் மோதியுள்ளன. இதில் ஸ்பெய்ன் அணி 16 தடவைகள் வென்றுள்ளது. 

சுவிட்ஸர்லாந்து அணி ஒரு தடவை மாத்திரமே வென்றுள்ளதுடன், இந்த வெற்றியானது 2010 இல் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் லீக் போட்டியில் ஸ்பெய்ன் அணியை சுவிட்ஸர்லாந்து வென்றிருந்ததுடன், இவ்விரு  அணிகளும் கடைசியாக சந்தித்த போட்டியானது 1க்கு1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here