Home சினிமா வாவ்… அஜித்தை போட்டிக்கு கூப்பிடலாம் போலயே – பைக் ஒட்டி அசத்தும் ராய் லட்சுமி!

வாவ்… அஜித்தை போட்டிக்கு கூப்பிடலாம் போலயே – பைக் ஒட்டி அசத்தும் ராய் லட்சுமி!

54
0

இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.ஆனால், அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது ஃபுல் பிளாக் உடையில் தூம் பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து மாஸா பைக் ஒட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here