Home சினிமா காசேதான் கடவுளடா… வித்தியாசமான கெட்டப்பில் யோகி பாபு!

காசேதான் கடவுளடா… வித்தியாசமான கெட்டப்பில் யோகி பாபு!

30
0

ஏவிஎம் தயாரிப்பில் 1972 ஆம் ஆண்டு முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் காசேதான் கட்வுளடா. இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று வரை நகைச்சுவை படங்களில் கல்ட் கிளாசிக்காக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் இந்த படம்
மீண்டும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. அதில் கதாநாயகியாக நடிக்கும் பிரியா ஆனந்த் மற்றும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி ஷிவாங்கி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் குக் வித் கோமாளியின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த புகழ் இந்த படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் யோகி பாபு சாமியார் வேடத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here