Home சினிமா அன்னைக்கு ரசிகன், இன்னைக்கு வில்லன்! – விஜய் சேதுபதி குறித்து லோக்கி ட்வீட்!

அன்னைக்கு ரசிகன், இன்னைக்கு வில்லன்! – விஜய் சேதுபதி குறித்து லோக்கி ட்வீட்!

45
0

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்று விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் மீசை தாடியுடன் விஜய் சேதுபதி, கமல்ஹாசன், பகத் பாசில் இருக்கும் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ் 2012ம் ஆண்டில் விஜய் சேதுபதி நடித்து வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட விழாவில் கமல்ஹாசன் – விஜய் சேதுபதி சந்திப்பு புகைப்படத்தையும், தற்போதைய விக்ரம் படத்தின் போஸ்டரையும் பதிவிட்டு 9 வருடங்களில் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை புகழும் வண்ணம் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here