Home சினிமா வலிமை ஆக்‌ஷன் காட்சிகளை இப்படிதான் எடுக்கப் போகிறாராம் ஹெச் வினோத்!

வலிமை ஆக்‌ஷன் காட்சிகளை இப்படிதான் எடுக்கப் போகிறாராம் ஹெச் வினோத்!

68
0

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அந்த காட்சிகளை கண்டிப்பாக வெளிநாட்டில் மட்டுமே எடுக்கவேண்டும் என வினோத் பிடிவாதமாக இருந்ததால் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் இப்போதுள்ள சூழலில் அது சாத்தியமில்லை என்பதால் ஐதராபாத்தில் செட் போட்டு எடுக்க உள்ளாராம். ஆனால் காட்சிகள் ஸ்பெயினில் எடுக்கப்பட்டது போல இருக்க வேண்டும் என்பதால் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் மட்டும் அங்கே சென்று சில காட்சிகளை படமாக்கி அதை இங்கு எடுக்கப்பட்ட காட்சிகளோடு பொறுத்த உள்ளார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here