Home சினிமா கமலிடம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான்… பஹத் பாசில் !

கமலிடம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான்… பஹத் பாசில் !

67
0

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள மாலிக் என்ற எதிர்பார்ப்புக்குரிய படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மே மாதம் 13 ஆம் தேதி மாலிக் படம் உலகமெங்கும் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மறுபடியும் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் தடைபட்டது. இந்நிலையில் மாலிக் திரைப்படம் ஜூலை 16 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் விளம்பரப் பணிகளில் இப்போது பஹத் பாசில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது ஒரு நேர்காணலில் கமலை விக்ரம் படப்பிடிப்புத் தளத்தில் சந்திக்கும் போது முதல் கேள்வி என்னவாக இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘கமலின் அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும். அவரிடம் கேட்க விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். எப்படி உங்களால் முடிகிறது?’ எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here