Home சினிமா ‘தலைவி’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் கொடுத்த சான்றிதழ்!

‘தலைவி’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் கொடுத்த சான்றிதழ்!

73
0

பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ‘தலைவி’ என்பதும் இந்த திரைப்படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

மேலும் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்ததை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்து திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படம் ரிலீசாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ‘தலைவி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கு சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதழ் அளித்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பிற்கான சென்சார் தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

thalaivi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here