Home உள்நாட்டு பெண் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக வெளியான செய்திகள் தொடர்பில் விசாரணை – ஊடக அமைச்சர்

பெண் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக வெளியான செய்திகள் தொடர்பில் விசாரணை – ஊடக அமைச்சர்

62
0

இலங்கையிலுள்ள பெண் ஊடகவியலாளர்களில் பெருமளவானோர் ஊடகநிறுவனங்களில் துன்புறுத்தல்கள்களுக்கு உள்ளாவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்றைய அமைச்சரவை ஊடக சந்திப்பில், ‘ இலங்கையிலுள்ள பெண் ஊடகவியலாளர்களில் பெருமளவானோர் ஊடகநிறுவனங்களில் துன்புறுத்தல்கள்களுக்கு உள்ளாவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ஊடக அமைச்சர் என்ற ரீதியில் நீங்கள் கவனம் செலுத்தியுள்ளீர்களா? ‘ என்று கேட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இது வரையில் இந்த விவகாரம் தொடர்பில் எனக்கு உத்தியோகபூர்வமான முறைப்பாடுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.

முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமாயின் அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here