Home உள்நாட்டு நம்பிக்கையில்லா பிரேரணையை நிச்சயம் தோற்கடிப்போம் – வாசு தேவநாணயக்கார

நம்பிக்கையில்லா பிரேரணையை நிச்சயம் தோற்கடிப்போம் – வாசு தேவநாணயக்கார

80
0

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக  ஐக்கிய  மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை நிச்சயம் தோற்கடிப்போம். ஸ்ரீ லங்கா  சுதந்திர பொதுஜன பெரமுன  கூட்டணியின் பங்காளி கட்சிகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க  முடிகிறது. என நீர்வழங்கல் அமைச்சர் வாசு தேவநாணயக்கார தெரிவித்தார்.

அமைச்சர்  உதயகம்மன்பிலவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வினவிய போது மேற்கண்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து தான்தோன்றித்தனமாக செயற்பாட்டால் கூட்டணியின் முரண்பாடு  குறித்து பலர் பலவிதமான கருத்துரைப்பார்கள். ஆகவே கூட்டணிக்குள் எழுந்துள்ள பிரச்சினைகளுக்க விரைவில் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம்.

பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான  முரன்பாடு தீவிரமடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடக்கம்  எரிபொருள் விலையேற்றம் வரை பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிக்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

எரிபொருள் விலையினை அதிகரிக்கும் தீர்மானத்தை வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தன்னிச்சையாக எடுக்கவில்லை. அமைச்சரவை மட்டத்தில் எடுத்த தீர்மானத்தை  பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் சவாலுக்குட்படுத்தி கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாட்டை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு  ஐக்கிய மக்கள் சக்தியினர்  வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளார்கள். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நிச்சயம் தோற்கடிப்போம்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் காணப்படும் சிறு கட்சிகள்  புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு  தீர்வு  காண்பது அவசியமாகும்.

கூட்டணிக்குள் காணப்படும்   முரண்பாடுகள்  தொடர்ந்தால் அது   அரசாங்கத்தையும் பலவீனப்பபடுத்தும். ஆகவே அனைத்து  தரப்பினரையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட எதிர்பார்த்துள்ளோம் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here