Home உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு ; 20 ஆயிரம் பொலிஸார் கடமையில்

பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு ; 20 ஆயிரம் பொலிஸார் கடமையில்

85
0

பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை நீக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறுகின்றனரா என்பதை கண்காணிக்க இன்று முதல் அன்றாடம் 20 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளனர்.

இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படும் பொலிஸார் பொது போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலையங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துவார்கள் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

பேருந்துகளை ஆய்வு செய்ய போக்குவரத்து பொலிஸார் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்கு மேலதிகமாக மேல் மாகாணத்தில் 700 சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சூப்பர் மார்க்கெட்டுகள், வர்த்தக வளாகங்கள் மற்றும் சந்தைகளில் 600 பொலிஸார் சிவில் ஆடைகளில் பணியமர்த்தப்படுவார்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here