Home உள்நாட்டு சாராவை கண்டு பிடித்தால் உண்மையான பின்னணி வெளிப்படுத்தப்படும் என அரசாங்கம் அஞ்சுகிறதா? – முஜிபுர் ரஹ்மான்

சாராவை கண்டு பிடித்தால் உண்மையான பின்னணி வெளிப்படுத்தப்படும் என அரசாங்கம் அஞ்சுகிறதா? – முஜிபுர் ரஹ்மான்

86
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரானுடன் நெருக்கமாக செயற்பட்ட சாரா ஜென்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தமைக்கான சான்றுகள் இல்லை என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் தெரியாது என்று கூறுகிறது. இதன் மூலம் சாரா கண்டுபிடிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று அரசாங்கம் என்று சந்தேகிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று இந்த அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் அவ்வாறு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.  எமது அரசாங்கத்தில் கைது செய்தவர்களையே இவர்களும் மீண்டும் கைது செய்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரானுடன் நெருக்கமாக செயற்பட்ட சாரா ஜென்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இதன் பிரதான சந்தேகநபராவார். அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பரவலாகக் கூறப்படுகின்ற போதிலும் , அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் இது குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை. எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.

விசாரணைகளை முன்னெடுக்க முயற்சிக்கவும் இல்லை. சாரா கண்டு பிடித்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான பின்னணி வெளிப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அஞ்சுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இதில் பின்வாங்காமல் அவரை துரிதமாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here