Home உள்நாட்டு போலி கடனட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட சீனப் பிரஜை உட்பட நால்வர் கைது

போலி கடனட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட சீனப் பிரஜை உட்பட நால்வர் கைது

58
0

Share

போலி கடனட்டைகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டமைக்காக சீனப் பிரஜையொருவர் உட்பட நால்வர் கல்கிஸ்ஸை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆன்லைனில் பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனம் அளித்த முறைப்பாட்டைதொடர்ந்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர்கள் ஆன்லைன் முறையின்படி கடனட்டைகள் மூலம் பொருட்களை ஆர்டர் செய்ததாகவும், பின்னர் கட்டணம் வசூலிக்கச் சென்ற வேளையில் அந்த அட்டைகளில் பணம் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

விசாரணைியல் சம்பந்தப்பட்ட நபர்கள் போலி கடனட்டைகளை தயாரிப்பது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேக நபர்கள் கண்டி, வரக்காபொல மற்றும் கல்கிஸையில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் ஒரு சீன நாட்டவரின் உதவியுடன் போலி கடன் அட்டைகளை தயார் செய்துள்ளனர்.

இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட  நான்கு நபர்களும் இன்று கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here