Home உள்நாட்டு போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் எழுவர் கைது..!

போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் எழுவர் கைது..!

81
0

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை பொலிஸாரால் வெவ்வேறு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் கஞ்சா மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கல்கிஸை குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிலோ கிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – வடக்கு ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் , வெல்லம்பிட்டி – வெஹெரகொடல்ல பிரதேசத்தில் 25 கிராம் ஹெரோயினுடன் 48 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்குலானை பொலிஸாரால் அங்குலானை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 25 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம பொலிஸாரால் தலங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் 42 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து அனுமதிப்பத்திரம் இன்றி வைக்கப்பட்டிருந்த 106 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிரிபத்கொட பொலிஸாரால் கிரிபத்கொட பிரதேசத்தில் 22 மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here