Home உள்நாட்டு எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளை முதல் கொடுப்பனவு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளை முதல் கொடுப்பனவு

62
0

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை முதல் இடம்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (11) பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

இதன்போதே இந்த கொடுப்பனவு தொடர்பாக பிரதமர் அறிவித்தார்.

கப்பல் விபத்துக்குள்ளானதால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. இழப்பீட்டை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு பிரதமர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here