Home உள்நாட்டு இலங்கையில் அமல்படுத்தப்பட்ட பயணத் தடை ஜூன் 21 ஆம் தேதி அதிகாலை 04 மணி வரை...

இலங்கையில் அமல்படுத்தப்பட்ட பயணத் தடை ஜூன் 21 ஆம் தேதி அதிகாலை 04 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

132
0

சில நிபந்தனைகளின் கீழ் பயணக் கட்டுப்பாடு தொடரும் என்றும், விரைவில் நிபந்தனைகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். ஆரம்பத்தில் மே 21 ஆம் தேதி விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு மே 28 ஆம் தேதி நீக்கப்படவிருந்தது, ஆனால் பின்னர் அது ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், பயண தடை மீண்டும் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என்று ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு இருந்தபோதிலுமபயண தடையை ஜூன் 21 வரை நீட்டிக்க அரசாங்கம் மீண்டும் முடிவு செய்துள்ளது. “அத்தியாவசிய சேவைகள், ஆடை தொழிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், கிராம சந்தைகள் (போலாக்கள்), விவசாய மற்றும் கரிம உர உற்பத்தி நடவடிக்கைகள் பயண கட்டுப்பாடு காலத்தில் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் செயல்படும்” என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here