Home உள்நாட்டு பிறந்து 8 நாட்களேயான ஆண் குழந்தை கொரோனாவால் பலி!

பிறந்து 8 நாட்களேயான ஆண் குழந்தை கொரோனாவால் பலி!

120
0

கம்பளை, புஸ்ஸல்லாவ பிரதேசத்தில், பிறந்து 8 நாட்களேயான ஆண் குழந்தையொன்று கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (9) உறுதிசெய்யப்பட்ட 67 கொவிட் மரணங்களுள் இக்குழந்தையின் மரணமும் உள்ளடங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர், அக்குழந்தைக்குத் தீவிரமாகக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால், குழந்தை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கம்பளை ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த மே 27 ஆம் திகதி இக்குழந்தை கம்பளை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும், உயிரிழப்புக்கான காரணம் கொவிட் நியூமோனியா நிலைமை என அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றோரின் ஊடாக குழந்தைக்கு கொவிட் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கும் வைத்தியர்கள், அக்குழந்தையின் பெற்றோரை கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதேவேளை, கடந்த வருடம் டிசெம்பர் 8 ஆம் திகதி கொழும்பு சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்றும் கொவிட் தொற்றால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here