Home உள்நாட்டு மீனவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வைத்தியசாலையில்..: ஐவர் கைது…!

மீனவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வைத்தியசாலையில்..: ஐவர் கைது…!

57
0

முல்லைத்தீவு மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த சாலை சிறுகடலில் இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருகையில், சாலை சிறுகடலில் இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் இறால் கூடு கட்டி இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் கட்டிய இறால் கூட்டில் இறால்கள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் சாலை சிறுகடலுக்கு சென்று அங்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மாத்தளன் பகுதி மீனவர்களை தாக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பதிலுக்கு மாத்தளன் பகுதியினை சேர்ந்தவர்களும் தாக்கியுள்ளார்கள். இந்நிலையில் கூரிய ஆயுதங்களைக் கொண்டு இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் மாத்தளன் பகுதி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன் போது இரணைப்பாலையினை சேர்ந்த மூன்று மீனவர்களும், மாத்தளன் பகுதியைச் சேர்ந்த  மீனவர் ஒருவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தாக்குலின் போது இரண்டு மோட்டார் சைக்கில்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், இரணைப்பாலையினை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மேலும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here