Home உள்நாட்டு சீரற்ற காலநிலையால் 16 பேர் பலி : 3 பேரைக் காணவில்லை

சீரற்ற காலநிலையால் 16 பேர் பலி : 3 பேரைக் காணவில்லை

76
0

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் தற்போது வரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 5 பேர் காயமடைந்துள்ளதுடன், 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

கடும் மழையுடனான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களின், 88 பிரதேச செயலக பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 67564 குடும்பங்களைச் சேர்ந்த, 2 இலட்சத்து 70 ஆயிரத்து 912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 26 ஆயிரத்து 846 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here