Home உள்நாட்டு ஆமையின் இறப்புக்கு தீ பிடித்த கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் காரணமா ? ஆராயுமாறு உத்தரவு

ஆமையின் இறப்புக்கு தீ பிடித்த கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் காரணமா ? ஆராயுமாறு உத்தரவு

111
0

தெற்கின் உனவட்டுன கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்த  இறந்த ஆமையின் மரணதுக்கு,  தீ பரவிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த இரசாயனங்கள் தான் காரணமா என்பதை உறுதி செய்ய, குறித்த ஆமையின் சடலத்தை, தெஹிவளை – அத்திட்டியவில் அமைந்துள்ள  வன ஜீவிகள் வைத்திய அலுவலகத்துக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 காலி மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரன இதற்கான உத்தரவை  ஹிக்கடுவ வனஜீவிகள் அலுவலகத்துக்கு பிறப்பித்துள்ளார்.

உனவட்டுன கடற்கரைக்கு, குறித்த ஆமையின் சடலம், நேற்று முன் தினம் கரை ஒதுங்கியிருந்தது.  இது தொடர்பில் ஹிக்கடுவ வன ஜீவி அதிகாரிகள் நேற்று காலி மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரணவுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பல் தீ பிடித்ததால், கடலில் கலந்த இரசாயனங்களின் தாக்கம் காரணமாக அந்த ஆமை உயிரிழந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகள் நீதிமன்றைக் கேட்டனர்.

 இந்த கோரிக்கையை ஆராய்ந்தே நீதிவான், ஆமையின் இறந்த உடலை அத்திட்டியவில் உள்ள வன ஜீவிகள் மருத்துவ அலுவலகத்துக்கு அனுப்பி அறிக்கை பெற உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here