Home உள்நாட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலை கழிவறையிலிருந்து கை குண்டு மீட்பு

கொழும்பு தனியார் வைத்தியசாலை கழிவறையிலிருந்து கை குண்டு மீட்பு

19
0

கொழும்பு – நாரஹேன்பிட்டி, லங்கா வைத்தியசாலையின் கழிவறையிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிவறையொன்றில்,  வெளிப்புறத்துக்கு தெளிவாக தெரியும் வண்ணம் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு அளிக்கப்பட்ட தகவலுக்கு அமைய, அங்கு சென்ற  அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவின் அதிகாரிகள்  கைக்குண்டினை மீட்டு பரிசோதித்துள்ளனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, குண்டு அதிரடிப்படையின் முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதனை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here