Home உள்நாட்டு கடந்த 24 மணிநேரப் பகுதியில் 947 பேர் கைது

கடந்த 24 மணிநேரப் பகுதியில் 947 பேர் கைது

95
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 947 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவற்றில் அதிகளவான கைதுகள் மத்தளையில் இடம்பெற்றுள்ளது. அங்கு 163 பேரும், குளியாபிட்டியில் 88 பேரும், நிக்கவரெட்டியவில் 73 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 21,087 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 19, 000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here