Home உள்நாட்டு 155 ஆவது பொலிஸ் தினம் இன்று

155 ஆவது பொலிஸ் தினம் இன்று

27
0

155 ஆவது பொலிஸ் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. 

16-year-olds deaths: Police probe writing on wall

1866 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் திகதி பி.டப்ளியூ.ஆர்.கெம்பல் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதை அடுத்து,  முழுமையான பொலிஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்ட தினம் பொலிஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இம் முறை கொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் பொலிஸ் தினமனது பாரிய கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி எளிமையாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

பூரண பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக ஆங்கிலேயர்களே பொலிஸ் மா அதிபராக இருந்து வந்ததுடன் முதல் முறையாக சுதந்திரத்துக்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு, உள்நாட்டு பொலிஸ் மா அதிபராக ரிச்சட் அலுவிஹார நியமிக்கப்பட்டிருந்தார்

பல்வேறு மாற்றங்கள் அபிவிருத்திகளுடன் முன்னேற்றங்களை கண்டு வரும் பொலிஸ் திணைக்களத்தில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன 35 ஆவது பொலிஸ் மா அதிபராக சேவையாற்றி வருகின்றார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நிறைவடையும் போது இலங்கை முழுவதும் சேவை வழங்கவென 495 பொலிஸ் நிலையங்கள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்துள்ளது. 

அத்துடன் மேலும் 190 பொலிஸ் நிலையங்கள் மக்கள் சேவைக்காக திறக்கப்படவுள்ள நிலையில் அவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here