Home உள்நாட்டு ஆப்கானிஸ்தான் தொடர்பில் உன்னிப்பாக அவதானிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

ஆப்கானிஸ்தான் தொடர்பில் உன்னிப்பாக அவதானிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

34
0

இலங்கையின் பிரதான அரசியல் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி ஆப்கானிஸ்தானின் அண்மைக்கால நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானதித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இலங்கையர்களின் தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் சார்க் அமைப்பின் அங்கத்துவ நாடாக இருப்பதால் இக்காலப்பகுதியில் சார்க் நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி சார்க் அமைப்பின் பொதுச் செயலாளரைக் கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here