Home உள்நாட்டு இந்திய உயர்ஸ்தானிகர் புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு

30
0

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Indian High Commissioner calls on newly appointed Foreign Minister

இந்த சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்புகளுக்காக பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்திய கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி இந்திய கிழக்கு துறைமுகங்களிலிருந்து ஒட்சிசன்களை இலங்கைக்கு விநியோகித்தமைக்காகவும் அமைச்சர், உயர்ஸ்தானிகரிடம் நன்றிகளை தெரிவித்தார்.

இலங்கையில் பெளத்த கலாசாரத் தலங்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் இந்திய அரசாங்கம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.

இந்திய-இலங்கை கூட்டு ஆணைய மாநாட்டினை கூட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here