Home உள்நாட்டு கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதிச்சேவையை பெற்றுக்கொடுக்கவே கொவிட் சட்டமூலம்

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதிச்சேவையை பெற்றுக்கொடுக்கவே கொவிட் சட்டமூலம்

51
0

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நீதிச் சேவையின் சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே கொவிட் 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று (தற்காலிக ஏற்பாடுகள்) சட்ட மூலத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏனைய நாடுகளில் உள்ள நான்கு காரணிகளின் பிரகாரம்தான் கொவிட –  19 தற்காலி ஏற்பாடு சட்டம் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

குறிப்பிட்ட கால எல்லைக்குள் குறித்ததொரு செயற்பாட்டை செய்யும் போது குறித்த கால எல்லையை எவ்வாறு நீடிப்பது, நீதிமன்ற தலையீடுகளில் உள்ள வழக்குகளை வேறு நீதிமன்றமொன்றத்துக்கு எவ்வாறு பெற்றுக்கொடுப்பது, கொவிட் காலத்தில் நீதிமன்றங்களை இணையத்தளத்தில் எவ்வாறு நடத்தி செல்வது, சில உடன்படிக்கைகளை சட்ட ரீதியாக செய்துக்கொள்ள முடியாது போகும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மேலதிக காலத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட நான்கு காரணிகளின் பிரகாரம்தான் இந்தச் செயற்பாடு இடம்பெற்றது.

மேற்கூறப்பட்ட நான்கு காரணிகளுக்கு அப்பால் இச்சட்ட மூலத்தில் வேறு எதுவும் இல்லை. அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும், துன்பங்களை எதிர்கொள்ளும் சாதாரண மக்களுக்கு சலுகையை பெற்றுக்கொடுப்பதே சட்டத்தின் நோக்கமாகும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here