Home உள்நாட்டு இந்தியாவை விட இலங்கையில் கொவிட் மரணங்கள் பதிவாகும் வீதம் 15 மடங்கு அதிகமாகும்: ராஜித சேனாரத்ன

இந்தியாவை விட இலங்கையில் கொவிட் மரணங்கள் பதிவாகும் வீதம் 15 மடங்கு அதிகமாகும்: ராஜித சேனாரத்ன

39
0

இந்தியாவை விட இலங்கையில்  கொவிட்  மரணங்கள்  பதிவாகும் வீதம் 15 மடங்கு அதிகமாகும் என்று ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இவ்வாறான அபாயமான நிலையில் இரவில் மாத்திரம் ஊரடங்கினை நடைமுறைப்படுத்தியிருப்பது பிரயோசனமற்ற தீர்மானமாகும். மருத்துத்துறையினரின் ஆலோசனைக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்குமாறு  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஒரு மில்லியன் சனத்தொகையில் ஒரு வாரத்திற்கு அதிகளவானோர் கொவிட் தொற்றால்  உயிரிழக்கும் பட்டியலில்  உலகளாவிய ரீதியில் இலங்கை நான்காவது இடத்திலுள்ளது. தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் வேகம் அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்திலுள்ளது.

இலங்கையில் நாளாந்தம் ஒரு மில்லியன் பேரில் 5.72 சதவீதமானோர் கொவிட் தொற்றால் உயிரிழப்பதாக ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 1.95 வீதமாகவும், இங்கிலாந்தில் 1.33 வீதமாகவும் , பிரான்ஸில் 0.76 வீதமாகவும் , இந்தியாவில் 0.3 வீதமாகவும் காணப்படுகிறது. அதற்கமைய இந்தியாவை விட இலங்கையின் மரண வீதம் 15 மடங்கு அதிகமாகும்.

இவ்வாறான நிலையில் உடனடியாக ஊரடங்கினை நடைமுறைப்படுத்தினால் எதிர்வரும் 20 நாட்களில் பதிவாகக் கூடிய 1,200 மரணங்களை தவிர்க்க முடியும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்பது உலக நாடுகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here