Home உள்நாட்டு இந்திய சுதந்திர தினமன்று பதவி ஏற்கிறார் மொரகொட ?

இந்திய சுதந்திர தினமன்று பதவி ஏற்கிறார் மொரகொட ?

34
0

இந்தியாவின் 75 ஆவது சுதந்திரம் எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் குறித்த தினமன்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பாராளுமன்ற அமர்வின்போது நடைபெற்ற வெளிநாட்டு அமைச்சு சார் அலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தின்போது கொரோனா சூழலுக்கு மத்தியில் பல உலக நாடுகள் இலங்கையை சிவப்பு வலயத்தில் உள்ள நாடாக அறிவித்திருப்பதால் நாடு தொடர்பான இந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அந்தந்த நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இங்கு குறிப்பிட்டார்.

சில நாடுகளில் காணப்படும் நிலைமைகள் காரணமாக இது சிக்கலான விடயமாக இருப்பதாகவும்ரூபவ் முடிந்தளவு முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு அலுவலகள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தோடு இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் இம்மாதம் 15ஆம் திகதி பதவியேற்கவிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒஸ்டின் பெர்னாண்டோ உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்து நீங்கியதன் பின்னர் புதிய உயர்ஸ்தானிகரை நியமிப்பது தொடர்பில் இழுபறியான நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.

குறிப்பாக மிலிந்த மொரகொடவை ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அதிகாரங்களுடன் நியமிக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கரிசனை கொண்டிருந்தார். 

எனினும் மிலிந்த மொரகொட 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி எழுதிய கட்டுரையை அடுத்து அவரது நியமனத்திற்கு இந்தியத்தரப்புக்கள் பச்சைக்கொடி காட்டுமா என்ற நிலைமைகளும் ஏற்பட்டிருந்தது.

எனினும் உயர்பதவிகளை நியமிப்பதற்கான பாராளுமன்றக்குழு மொரகொடவின் பெயரை அங்கீகரத்தித்திருந்த நிலையில் டெல்லிக்கு அவருடைய பெயர் முன்மொழியப்பட்ட நிலையில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து அவர் இந்திய இலங்கை உறவுகளை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பிலான பரிந்துரைகளை அறிக்கையாக ஜனாதிபதியிடத்தில் கையளித்திருந்தார். இவ்வாறான நிலையில் தற்போது அவர் உத்தியோக பூர்வமாக பதவி ஏற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here