Home உள்நாட்டு மேலும் 2 மில்லியன் சினாபோரம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

மேலும் 2 மில்லியன் சினாபோரம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

76
0

சீனாவிலிருந்து மேலும் 2 மில்லியன் சினாபோரம் தடுப்பூசிகளின் அளவுகள் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரு விமானங்களினூடாக இவை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

ஒரு மில்லியன் தடுப்பூசி அளவுகளுடன் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் UL-1869 என்ற விமானம் இன்று காலை 9.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர் மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசி அளவுகளுடன் UL-865 என்ற மற்றொரு ஸ்ரீலங்கன் விமானம் பீஜிங்கிலிருந்து புறப்பட்டு காலை 9.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதேவேளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இலங்கைக்கு அனுப்புவதாக கூறப்பட்ட 4 மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசியின் மற்றொரு தொகுதி ஞாயிறன்று நாட்டை வந்தடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here