Home உள்நாட்டு பிளாஸ்டிக் கழிவுகளை முடிவுக்குக் கொண்டுவர சிங்கப்பூரின் மகத்தான பங்களிப்பு

பிளாஸ்டிக் கழிவுகளை முடிவுக்குக் கொண்டுவர சிங்கப்பூரின் மகத்தான பங்களிப்பு

41
0

பிளாஸ்டிக் கழிவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட உலகளாவிய இலாப நோக்கமற்ற கூட்டமைப்பு இலங்கைக்கு கடற்கரையை சுத்தம் செய்யும் இயந்திரங்களை வழங்கியுள்ளது.

கடற்கரையை சுத்தம் செய்யும் எட்டு (8) பீச் டெக் ஹைட்ரோ ஸ்வீபி இயந்திரங்களை சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட உலகளாவிய இலாப நோக்கமற்ற கூட்டமைப்பு இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது. 

இந்த நன்கொடை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே  இன்று நடைபெற்ற விழாவில் முறையாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்வான நிலங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் திருமதி. தர்ஷனி லஹந்தபுர ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

ஜேர்மனியில் உள்ள கோஸ்போஹெர் ஜெலன்டெஃபாஹெர்ஜியூக் ஏஜி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் பீச்டெக் ஹைட்ரோ ஸ்வீபி இயந்திரங்கள், பிளாஸ்டிக் நாற்றுகள் மற்றும் ஏனைய வகை கழிவுகளை திறம்பட மற்றும் திறமையாக சுத்தம் செய்யும் திறன் கொண்டவையாகும். 

அபாயகரமான பொருட்களுடன் மனிதத் தொடர்பைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் கடற்கரையை சுத்தம் செய்ய உதவுவது இந்த இயந்திரத்தின் மற்றுமொரு நன்மையாகும்.

மே 2021 இல் இலங்கையின் மேற்குக் கடற்கரையில் மூழ்கிய எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு இந்த இயந்திரங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த நன்கொடை சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here