Home உள்நாட்டு அஸ்ட்ராசெனிகா இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்கள் இதோ..!

அஸ்ட்ராசெனிகா இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்கள் இதோ..!

43
0

அஸ்ட்ராசெனிகா இரண்டாம் கொவிட் தடுப்பூசி இந்த வாரம் முழுவதும் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராசெனிகா முதலாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதனை பெற்றுக்கொண்ட மையங்களுக்கே இரண்டாம் தடுப்பூசிக்காகவும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பத்தரமுல்ல – தியத உயன தடுப்பூசி செலுத்தல் மையத்தில் நேற்று (01.08.2021) முதல் ஆரம்பமான அஸ்ட்ராசெனிகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல் பணிகள்  எதிர்வரும் புதன்கிழமை (04.08.2021) வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தடுப்பூசி செலுத்தல் மையத்தில் குறித்த காலப்பகுதியினுள் 24 மணித்தியாலங்களும், அஸ்ட்ராசெனிகா இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here