Home உள்நாட்டு இஷாலினிக்கு நீதி கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்..!

இஷாலினிக்கு நீதி கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்..!

46
0

துஷ்பிரயோகத்துக்குள்ளாகி உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதி கோரி, ஹட்டனில் இன்றும் (24.07.2021) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

ஈரோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டனில், இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து நடைபாதையாக அட்டன் நகரத்துக்கு வந்தடைந்து, ஹட்டன் மணிகூட்டு கோபுரத்துக்கு முன்பாக கோசத்துடன் நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் யுவதிகள் மத பேதமின்றி கட்சி பேதமின்றி சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here