Home உள்நாட்டு ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு!

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு!

102
0

ஹிஷாலினி என்ற 16 வயதான சிறுமி மரணித்தமை தொடர்பில் முன்னதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியினது தந்தை மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் புதுக்கடை இலக்கம் 4 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, கைதானவர்களை காவற்துறையினர் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் கால்துறை விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக சட்டா அதிபர் சஞ்சஜ் ராஜரட்ணத்தினால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீாிஸ் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here