Home உள்நாட்டு எதிர்வரும் 21ஆம் திகதி புனித ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்படும்: கொழும்பு பெரிய பள்ளிவாசல்

எதிர்வரும் 21ஆம் திகதி புனித ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்படும்: கொழும்பு பெரிய பள்ளிவாசல்

78
0

புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1442 துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்று மாலை மஹ்ரிப் தொழுகையைத்தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள், வளிமண்டல திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டின் எப்பிரதேசத்திலும் துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமான தகவல் கிடைக்காதமையால், துல் கஹ்தா மாத்தை 30ஆக பூரணப்படுத்தி, நாளை12திகதி துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாள் ஆரம்பிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் துல்ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளான எதிர்வரும் 21ஆம் திகதி புதன் கிழமை புனித ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்படும் என தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அத்துடன் புனித அரபா தினம் துல் ஹஜ் 9ஆம் நாளான எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here